இப்போது வரும் படங்களில் சில இடங்களில் கவர்ச்சிகள் வந்தாலே போதும் ஆபாச படம் என்கிறார். ஆனால் பாலிவுட்டில் கூச்சப்படாமல் எல்லை மீறி படம் எடுப்பவர்களும் உண்டு.
அப்படியாக ஒரு படம் ஹிந்தியில் உருவாகி வருகிறது. பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி பாபுமோஷாய் பந்தூக்பாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். குஷன் நந்தி இயக்கியுள்ள இந்த படம் வரும் 25ம் தேதி ரிலீஸாகிறது.
இதில் பல இடங்களில் செக்ஸ் காட்சிகளை இயக்குனர் வைத்திருக்கிறாராம். சென்சார் போர்டே பல காட்சிகளை கட் பண்ண சொல்லி உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
இதில் நடித்த ஹீரோ சித்திக்கின் மனைவி தன் கணவ்ர் அப்படியான காட்சிகளில் நடிக்கிறார் என விசயம் தெரிந்ததும் 2 நாட்களுக்கு மேலாக பேசாமலேயே இருந்துள்ளார்.
பின் எப்படியோ அவரை சமாதானப்படுத்தி சித்திக்கி பேச வைத்துள்ளார்.