பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ் – ராகுல் பிரீத்தி சிங் நாயகன், நாயகியாக நடித்துள்ள தெலுங்கு படம் ‘ஜெய ஜானகி நாயகா’. இதை பொய்யப்பட்டி சீனு இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனது.
இதில் வாணி விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 4 காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கும் இவருக்கு சம்பளமாக ரூ.40 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கூறிய இயக்குனர், “வாணி விஸ்வநாத் பாத்திரம் இந்த படத்தில் மிகவும் முக்கியமானது. எனவே, இந்த தொகையை சம்பளமாக கொடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கும் கேத்தரின் தெரசாவுக்கும் பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.