ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் 408 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் வெய்ன் ஜான்சன் இரண்டாவது இடத்திலும், வின் டீசல் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஜாக்கி சான் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ‘அயர்ன் மேன்’ ராபர்ட் டவுனி ஆறாவது இடம் பிடித்துள்ளார். டாம் குரூஸுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது.
பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷய்குமார் ஆகியோரும் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.
இதில் பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் 243 கோடி ரூபாய் வருமானத்துடன் எட்டாவது இடத்திலும், சல்மான் கான் 237 கோடி ரூபாய் வருமானத்துடன் ஒன்பதாவது இடத்திலும், அக்க்ஷய் குமார் 227 கோடி ரூபாய் வருமானத்துடன் 10 வது இடத்திலும் உள்ளனர்.
திரைப்படங்கள், விளம்பரம், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பு ஆகியவற்றிற்காக நடிகர்கள் பெறும் மொத்த வருமானத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.