பிரபலங்களின் விபத்தோ, மரணமோ இல்லை திருமணமோ எதுவாக இருந்தாலும் ரசிகர்களிடம் மிகவும் வைரலாக பரவிடும். அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் திவ்யங்கா.
இவர் அண்மையில் ஒரு நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் சேர்ந்து நடனமாடி வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் இவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக செய்தி பரவியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியான திவ்யங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் நான் சாகவில்லை, உயிரோடு தான் இருக்கேன்.
வதந்தியை பரவி எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.