பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை க்ரிதி சனோன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இவரிடம் வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றார்களா? என்று கேட்க, அதற்கு அவர் ‘ஆம், ஆனால், அது பாலிவுட்டில் இல்லை.
மற்ற மொழி படங்களில் இது உள்ளது, நான் ஒரு ஏஜென்ஸி மூலம் நடிக்க வந்ததால் எனக்கு இந்த மாதிரியான டார்ச்சர் இல்லை’ என்று கூறியுள்ளார்.
ஆனால், ஒரு சில நாட்களுக்கு முன் கங்கனா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது, தற்போது பாலிவுட்டில் இது இல்லை என க்ரிதி சொன்னது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.