தமிழ் சினிமாவில் நம்பர் 1 நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா.
நடிகர்களுடன் டூயட் பாடி நடித்தாலும் சோலோவான படங்களிலும் ஒருபக்கம் கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் இந்த வருட தீபாவளிக்கும், வரும் பொங்கலுக்கும் தன் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார்.
மெர்சல், உட்பட சுமார் ஐந்து படங்கள் வெளியாகவுள்ள தீபாவளிக்கு நயன்தாரா நடித்த ‘அறம்’ படமும் வெளியாகவுள்ளது.
அதேபோல் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்கள் வெளியாகவுள்ள பொங்கல் தினத்தில் நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
நயன்தாரா முன்னணி நாயகர்களின் படங்களோடு மோதி ஜெயிப்பாரா என்பதை விரைவில் பார்க்கலாம்.