தமிழக அரசு மீது நடிகர் கமலஹாசன் விமர்சனம் வைத்தபோதெல்லாம் ஆதரவையோ அல்லது அமைதியான ஏற்பையோ வழங்கிய இணையவாசிகள் முதல்வராக விரும்புவதாக அவர் கூறியதும் கணிசமாக அவரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள். அவரது அரசியல் விருப்பத்தை வரவேற்கும் பதிவுகளும் காணப்பட்டன.
சுவையும், நக்கலும் நிறைந்த பதிவுகளால் அவரது அரசியல் விருப்பம் இணையவாசிகளால் விமர்சிக்கப்பட்டது. நேரடியாகவே முதல்வராகும் விருப்பத்தை வெளியிட்டிருந்தது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது தெரிந்தது.
மேம்போக்காகவும், நகைச்சுவையாகவும் அந்த விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவற்றில் பல வாதங்கள் உள்ளுறையாக இருந்தன. டிவிட்டரில் வெளியான இந்தப் பதிவு தாமே எல்லாமாவுமாக இருக்க விரும்புகிறவராக கமலை விமர்சிக்கிறது.
சமூகப்பணிகள், பிரச்சினைகளை எதிர்த்துப் போராட்டங்கள் ஏதும் செய்யாத கமல் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கும் பதிவுகள், அவரது சமூகப் பார்வையை கேள்வி கேட்கும் பதிவுகளும் வெளியாயின.
கமல் ஒவ்வொரு தலைவரையும் சந்திக்கும்போதெல்லாம் அவர் அந்தக் கட்சியில் சேர்வார் என்று விமர்சகர்கள் சொல்வதைக் கிண்டலடிக்கும் ஒரு பதிவு….