தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பு என்று மட்டும் தன் வட்டத்தை சுருக்கி கொள்ளாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் தன் படங்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற ஹீரோக்களுக்கும் பாடி வந்தார். அந்த வகையில் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகும் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ்க்கும் பாடியுள்ளார்.
மணிரத்னத்தின் உதவி இயக்குனர் தனா இயக்கும் படை வீரன் படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருந்த போது படத்தை பார்த்துள்ளார்.
மிகவும் பிடித்து போய் தானே ஒரு பாடல் பாடித்தருவதாக கூறி ”லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலை பாடி கொடுத்துள்ளாராம் தனுஷ்.
விஜய் யேசுதாஸ் தனுஷுன் மாரி படத்தி்ல் வில்லனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.