பாலிவுட் சினிமாவை சேர்ந்தவர் நடிகர் குனால் கெம்மு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். நடிகை சோஹா அலி கான் 2004 முதல் முக்கிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். நட்சத்திர தம்பதிகளான இவர்கள் இருவரும் கடந்த 2015 ல் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு அக்டோபர் 29 வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை குனால் தன் ட்விட்டரில் மங்களரமான நாளில் எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
உங்களது அன்புக்கும், ஆசிர்வாதத்திற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சோஹாவுக்கு வளைகாப்பு சுப நிகழ்ச்சி நடந்தது. இது இவர்களின் முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.