அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மகள் மலியா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் தனது ஆண் நண்பரும், விளையாட்டு வீரருமான ரோரி என்பவருக்கு பொது இடத்தில் வைத்து முத்தமிடும் வீடியோ காட்சி வெளியானது. இது அமெரிக்கா முழுவதும் ஆன்லைனில் வைரல் ஆனது.
இதை அமெரிக்க ஊடகங்கள் பெரிதுபடுத்தி பல்வேறு விதமாக சித்தரித்து செய்திகள் வெளியிட்டன. முன்னாள் ஜனாதிபதியின் மகள் பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது? ஒபாமாவின் மகளா இப்படி? போன்ற தலைப்புகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விஷயத்தில் ஒபாமாவின் மகள் மலியாவுக்கு முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி மகள்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள், இவாங்கா மலியாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், மலியாவுக்கும், இளைஞர்களுக்குமான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இதை பெரிய தவறாக சித்தரிப்பது சரியான விஷயமாக தெரியவில்லை. ஊடகங்கள் தங்கள் கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தம்பதி மகள் செல்சியாவும், மலியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் பெண்ணிற்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை உண்டு.
அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இனிமேலாவது இது போன்ற விஷயங்களை பெரிதுபடுத்த வேண்டாம் என்று டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.