‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான்மகான் அல்ல’ தொடங்கி சமீபத்தில் வெளிவந்த நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.
இவர் தற்போது நடிகராக அறிமுகமாகிறார். ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மிஷ்கின், விக்ராந்த் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா தான் இந்த படத்தை இயக்குகிறார். ஹீரோயின் மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.