நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி தனக்கு செட்டாகும் ரோல்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். கடைசியாக விக்ரம் வேதா படத்தில் அவரின் ரோல் பாராட்டப்பட்டது.
தற்போது அவர் நடிகர் விமலுடன் காதல் மன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வரலக்ஷ்மி ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுருந்தார். அதில் விமல் மற்றும் வரலக்ஷ்மி இருவரும் டாஸ்மாக் பாரில் ஒரு பீர் பாட்டிலை வைத்திருப்பது போல உள்ளது. “குடிக்கலாமா.. வேணாமா? முடிவெடுக்கும் நேரம்” என வரலக்ஷ்மி அந்த புகைப்படம் பற்றி ட்விட்டரில் குறிப்பிருந்தார்.
இது படத்தில் வரும் காட்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.