புதிய ஸ்பைடர் மேனாக, நடிகர் டாம் ஹோலண்ட் தேர்வாகி உள்ளார்.ஸ்பைடர் மேன் கதையைக் கொண்ட ஐந்து படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.
இதில் முதல் மூன்று படங்களில் டோபி மகியூரும், அடுத்த இரண்டு படங்களில் ஆண்ட்ரு கார்பீல்டும் நடித்தனர். ஆண்ட்ரூ கார்பீல்டு இப்படங்களில் தன்னுடன் நடித்த எம்மா ஸ்டோனை நிஜவாழ்க்கையிலும் காதலித்து வருகிறார்.
இதற்கிடையில், ‘புதிய ஸ்பைடர் மேன் யார்?’ என்று சோனி பிக்சர்ஸ் நிறுவனமும், மார்வெல் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து அறிவித்து உள்ளன. இதில் ‘தி இம்பாசிபிள்’ உட்பட சில படங்களில் நடித் துள்ள டாம் ஹோலண்ட், ஸ்பைடர் மேன் பீட்டர் பார்க்கராக நடிக்கிறார்.
இவர், ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ என்ற படத்தில் ஸ்பைடர் மேனாக சிறு வேடத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து முழுநீள ஸ்பைடர் மேன் கேரக்டரில் நடிக்கிறார். இதை ஜான் வாட்ஸ் இயக்குகிறார். 2017ல் படம் திரைக்கு வருகிறது.