பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது காதலி நடாஷா தலாலை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகின.
2017ம் ஆண்டில் பத்ரிநாத் கி துல்ஹனியா, ஜுட்வா 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் டேவிட் தவானின் மகனான நடிகர் வருண் தவான்.
அவர் ஃபேஷன் டிசைனர் நடாஷா தலாலை காதலித்துக் கொண்டிருக்கிறார்.
டாப்ஸி – ஜுட்வா 2 படத்தில் நடித்தபோது வருண், டாப்ஸிக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் வருண் நடாஷா இடையே பிரச்சனை என்றும் கூறப்பட்டது.
தனி வீடு – வருண் தவான் மும்பையில் சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி அண்மையில் குடியேறினார். வருண் நடாஷாவை திருமணம் செய்யப் போவதால் தான் தனியாக வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
அடுத்த கட்டம் – நான் தற்போது தான் புது வீட்டில் குடியேறியுள்ளேன். அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து யோசிக்கும் முன்பு குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது நான் தற்போதைய வாழ்க்கையை என்ஜாய் செய்ய விரும்புகிறேன் என்கிறார் வருண்.
நடாஷா – நிச்சயம் அடுத்ததாக நான் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அது உடனே நடக்காது. நான் இந்த இடத்திற்கு எளிதில் வந்துவிடவில்லை. அதனால் இந்த தருணத்தை என்ஜாய் செய்வது மிகவும் முக்கியம் என.