நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் அப்போது நம்பர் ஒன் ஹீரோயினாக இருந்தவர். ரஜினி, கமல் என அப்போதைய நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர்.
சொல்லப்போனால் 80, 90 களில் இளம் பெண்களுக்கு இவர் தான் ரோல் மாடல். பாலிவுட் தயாரிப்பாளரை போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது அவரின் மகள் கூட நடிக்க வந்துவிட்டார். நடிகைகள் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்வது இயல்பாகி விட்டது. ஸ்ரீதேவி உதட்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக புகைப்படம் வெளியாகியுள்ளது.
அவருக்கு வயது தற்போது 50. இதனால் சிலர் அவரின் முந்தைய தோற்றத்தை வைத்து பார்த்துவிட்டு ஸ்ரீதேவி தானா என சந்தேகம் எழுந்துள்ளது. சற்று வித்தியாசமாக இருக்கிறார் என பலரின் கருத்து.
ஆனால் இது அவர் வாயில் எதையோ சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ என்கிறார்கள். வைரலாகி வரும் இந்த விசயம் குறித்து அவர் எதுவும் தெளிவுபடுத்தவில்லை.