நடிகை ஸ்ரீதேவி இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். 1985ல் Mithun Chakraborty என்பவரை திருமணம் செய்துகொண்டார், பின் மூன்று வருடங்களில் விவாகரத்து செய்தார். அதன் பிறகு 1996ல் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் அது இரண்டாவது திருமணம் தான்.
தற்போது ஸ்ரீதேவி இறந்தது பற்றி போனி கபூர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
“இந்த உலகத்திற்கு ஸ்ரீதேவி வெறும் நடிகை, ஆனால் எனக்கு அவர் காதலி, மனைவி, தோழி, என் மகள்களின் தாய் – அவர்களுக்கு எல்லாமே ஸ்ரீதேவிதான். அவர் இல்லாமல் இனி நாங்கள் எப்படி வாழ போகிறோம் என்பதை நினைத்து தான் வருந்துகிறேன்.”
“ஊடகங்கள் ஸ்ரீதேவி பற்றி பேச நினைத்தால் நல்ல விஷயங்கள் பற்றி பேசுங்கள். ஒரு நடிகைக்கு இறப்பு என்பது கிடையாது, அவர் எப்போதும் வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டு தான் இருப்பார்” என கூறியுள்ளார்.