நீண்ட நாட்களாக திருமணம் ஆகாததால் நடிகர் ஆர்யா அதற்காக பெண் தேடும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகிறார். அது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரியிடம் சமீபத்தில் ஒருவர் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைக்குறீர்கள் என கேட்டார், அதற்கு பதிலளித்த அவர், “என் வீட்டில் டிவி இல்லை” என பதிலளித்தார்.
தற்போது இன்று தான் டிவி கனெக்ஷன் வாங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் இப்போது ‘ஒரு நான்சென்ஸ் நிகழ்ச்சியை’ பார்த்தேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் ஆர்யாவின் நிகழ்ச்சியைத்தான் இப்படி விமர்சித்துள்ளார் என பலரும் கூறிவருகின்றனர்.