நடிகை ராகுல் பிரீத் சிங் செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கான ‘கில்லி’-இல் அறிமுகமானார். தமிழில் ‘தடையறத் தாக்க’ திரைப்படத்தில் அறிமுகமான இவர், கெளதம் கார்த்திக் உடன் ‘என்னமோ ஏதோ’ படத்திலும் தோன்றினார்.
தமிழில் பெரிய அளவில் புகழ் அடையாவிட்டாலும் தெலுங்கு சினிமாவில் இவரது இரண்டாவது திரைப்படமான ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட்டின் முக்கிய நாயகி ஆனார். தொடர்ச்சியாக இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி அடைந்ததில் ராம்சரண் தேஜா, ரவி தேஜா, என்.டி.ஆர் போன்ற முக்கிய நடிகர்களின் ஜோடி ஆகியுள்ளார்.
டோலிவுட் கொண்டாடிவரும் நாயகி ராகுல் பிரீத் சிங்கை அமெரிக்க கலாச்சார அமைப்பு ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தாளியாக அழைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் ராகுல் பிரீத் சிங்குடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புபவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த அறிவிப்பினால் தெலுங்கு சினிமாவின் முக்கிய நாயகி அமெரிக்காவிலும் கொண்டாடப்படுவது தெரியவருகிறது. ராகுல் பிரீத் சிங் தான் நடிக்கும் படங்களுக்கும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.