தல அஜித் விசுவாசம் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் துவங்கவுள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது. அதற்காக ஒரு கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்றார் அஜித். ஏர்போர்ட்டில் அவர் உள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் தமனும் அஜித்தை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.