தீபிகா படுகோன் மற்றும் ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் திரைப்படமான ‘தமாஷா’-வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் கோர்சிக்கோ தீவில் படமாக்கப்பட்ட பாடல் காட்சியின் இந்த புகைப்படம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே கசிந்தது குறிப்பிடத்தக்கது. ரன்பீர் கையைப் பற்றிக்கொண்டு தீபிகா பின்தொடர்வதாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது.
இம்தியாஸ் அலி இயக்கும் இந்தப் படம் இரு நடிகர்களுக்குமே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இம்தியாஸ் அலி இயக்கிய ‘லவ் ஆஜ் கல்’ திரைப்படம் தீபிகாவை பாலிவுட்டின் முக்கிய நடிகையாக உயர்த்தியது. இதேபோல, ‘ராக்ஸ்டார்’ படம் ரன்பீர் கபூரை எக்காலத்திலும் மறக்கமுடியாத நடிகனாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.