பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், நடிப்புக்கு பின்னால், தனது சக நடிகர்கள் அனைவரிடமும் மிகவும் ஜாலியாக பழகக்கூடியவர். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு ஏதாவது ஒரு பெயர் வைத்து அவரை கிண்டலடிப்பார். இது எப்போதும் எல்லை மீறாது. ஆரோக்கியமான சூழ்நிலையிலேயே நிலவும். இவருடைய கிண்டல் பார்வை தற்போது அசின் பக்கம் திரும்பியுள்ளது.
அசின் தற்போது அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக ‘ஆல் இஸ் வெல்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘ஓ மை காட்’ படத்தை இயக்கிய உமேஷ் சுக்லா இயக்கி வருகிறார். ரிஷிகபூர், சுப்ரியா பதாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பின் போது, அசின் தனது நண்பர்களுடன் இருக்கும்போது அபிஷேக் பச்சன் அவரை இந்தியில் ‘மகிலா மண்டாலி’ என்று கிண்டல் செய்வாராம். மகிலா மண்டாலி என்றால் பெண்கள் சங்கம் என்று அர்த்தமாம்.
அபிஷேக் பச்சன் தன்னை இப்படி கிண்டல் செய்வதை, அசின் ரொம்பவும் கூலாக எடுத்துக் கொள்வாராம். அசின் கைவசம் தற்போது எந்த படங்களும் இல்லை. இந்தியில் மட்டும்தான் தற்போது இவர் நடித்து வருகிறார். இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததுகூட ஏதோ அதிர்ஷ்டம்தானாம். அதனால், இந்த மாதிரி தொந்தரவுகளை கூட ரொம்ப ஜாலியாக எடுத்துக் கொண்டு நடித்து வருகிறாராம்.