தக்காளி கெச்சப்புடன் நன்றாக சமைத்த இறைச்சியை விரும்புகின்ற மனிதர் ஒருவருக்கு இதுவொரு மிகவும் சிக்கலான உணவு பட்டியலாக இருக்கும்.
“தேன் கலந்த எலுமிச்சையுடனான பச்சை மங்காய் கெராப் மற்றும் நட்சத்திர மீன்”, “ஓசியான் – கொரிய உணவுகள் அடைக்கப்பட்ட வெள்ளரி”, “டேகு ஜோரிம் – முள்ளங்கியோடு சோயா குழம்பாக சமைக்கப்பட்ட மீன்”, ஆசிய காய்கறிகள் இந்த உணவு பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
அதிபர் டிரம்புக்கு இதுவரை அறிமுகமில்லாத ஏராளமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்த்து பற்றியும், ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் இந்த உணவை உற்று கவனிப்பதையும் பற்றி சொல்லுவதற்கு பல தகவல்கள் உள்ளன.
இந்த இரு நாட்டு தலைவர்களும் ஹாஜன்-தாஸ் ஜஸ்கிரீம் உருகாமல் பெற்று கொள்வார்களா, அல்லது காரமான பன்றி இறைச்சி மூலம் ஒன்றும் நிகழாமல் போய்விடுமா? என்று கனடா ஒளிபரப்பு நிறுவனத்தின் செய்தியாளர் சச்சா பேட்ரிக் கேட்டுள்ளார்.
ஆக்டோபஸ் போன்ற சில உணவு வகைகளை அதிபர் டிரம்ப் சாப்பிடுவாரா என்று பிறர் குறிப்பிட்டுள்ளனர்.
கொரியர்களும் இந்த உணவு வகைகள் தொடர்பான தங்களுடைய ஆச்சர்யங்களை எழுப்பியிருந்தனர்.
ஓசியான் என்பது மாட்டிறைச்சி, முட்டை மற்றும் கேரட் அடைக்கப்பட்ட வெள்ளரியால் உருவாக்கப்பட்ட உணவு வகையாகும்.
இது, 1392 முதல் 1897ம் ஆண்டு வரை ஆட்சி செய்தி ஜோசான் வம்சத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும்.
அரச குடும்பத்தால் சாப்பிடப்படும் உணவு வகைகளில் ஒன்றாகவும் இது இருந்தது.
பயணம் மேற்கொள்ளும் நாட்டு தலைவருடன், பிரிட்டன் பிரதமர் விருந்து உண்பது போலவும், எட்டாம் ஹென்றி மன்னருக்கு மிகவும் விருப்பமான பொரித்த அன்னத்தை சாப்பிடுவது போலவும் இது உள்ளது.
இளம் கொரியர்கள் இந்த உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்ள கவலைப்படுவதில் ஆச்சர்யம் எதுமில்லை. மக்கள் தினமும் சாப்பிடுகின்ற சோபாஜி என்கிற வெள்ளரி கிம்ச்சி என தவறுதலாக சிலர் எண்ணுவதை புரிந்துகொள்ள முடிகிறது.
“இது என்ன சுவையில் இருக்கும் என எண்ணி பார்க்கிறேன்” என்று ஒரு தென் கொரியர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இந்தப் பட்டியலிலுள்ள டேகு ஜோரிம் என்கிற உணவு பெருமளவு தெரிந்ததே. இது கொதிக்கும் வரையில் வேக வைக்கப்பட்ட இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் பெருமளவு நீர் ஆவியாகும் வரையில், சோயாவில் சமைக்கப்பட்ட குழம்பாகும்.
கொரிய சாப்பாட்டில் பல சிறிய கூட்டு வகைகளில் ஒன்றாக இது பொதுவாக சாப்பிடப்படுகிறது.
ஏப்ரல் மாதம் முதல்முறையாக தென் கொரிய தலைவரை சந்தித்தபோது, வட கொரிய தலைவர் கிம், அவருக்கு அளித்த பியோங்யாங் குளிர் நூடுல்ஸ் இந்தப் பட்டியலில் இல்லை.
கிம் ஜாங்-உன் தாயகத்தில் இருப்பதைபோல உணர செய்வதற்கு இயன்ற அளவிலான முயற்சியை இந்த மாநாட்டை நடத்திய சிங்கப்பூர் மேற்கொண்டது.
உணவில் அதிபர் டிரம்பின் விரும்பத்தை நிறைவேற்றுவதற்கு ராஜீய அதிகாரிகள் மிகவும் கவனமாக இருந்துள்ளனர். இந்த விருந்தை அவர் விரும்பி உண்பதற்கு ஏற்ற வகையில் இந்த உணவு பட்டியல் உருவாக்கப்பட்டிருந்தது.
தொடக்கத்தில் உண்பதற்கு வெண்ணெய் பழத்தோடு (அவக்கோடா) வழங்கப்பட்ட பாரம்பரிய இறால் உணவை அவர் தெரிவு செய்திருக்கலாம்.
முக்கிய உணவு வகையாக உருளைக்கிழக்கு டூபினோசிஸ் மற்றும் வேக வைத்த ப்ரோக்கோலியோடு (பூக்கோஸ்) வழங்கப்பட்ட மாட்டின் சிறிய விலா இறைச்சியை அவர் எடுத்து கொண்டிருக்கலாம்.
பழக்கூழ் வகையாக செர்ரி பழமுடன் ஹாஜன்-தாஸ் ஐஸ்கீரீமை சாப்பிட்டிருக்கலாம்.
மாட்டின் சிறிய விலா இறைச்சி அதிபர் டிரம்புக்காக தயாரிக்கப்பட்டு, சிவப்பு திராட்ஷை மது சாஸோடு வழங்கப்பட்டது.
ஆனால், தங்கள் நாட்டிற்கு வந்துள்ள நாடுகளின் உயரிய தலைவர்களுக்கு தங்கள் நாட்டின் சுவையான உணவு வகைகளை கொடுக்க சிங்கப்பூர் தவறிவிடவில்லை.
சீன, இந்திய, மலாய் என மூன்று முக்கிய இனங்களோடு வேற்றுமையில் ஒன்றுமையோடு வாழும் வரலாற்றை சிங்கப்பூர் கொண்டு விளங்குகிறது.
மேலும், இனிப்பு மற்றும் புளிப்பு மசாலாவில் பன்றி இறைச்சி மற்றும் வீட்டில் தயாரித்த எக்ஸோ கார சாஸோடு யாங்ட்ச்சோ பொரித்த சோறு இன்னொரு முக்கிய உணவு வகையாக இருந்துள்ளது. இந்த வகை உணவு சிங்கப்பூர் சீன உணவகங்களில் பரிமாறப்படுகின்றன.
ஆனால், இந்த உணவு வகை தங்களுடையது என்று சில சிங்கப்பூர் மக்கள் உரிமை கோருகின்றனர்.
ஆனால், உண்மையில் இந்த வகை உணவு 1980களில் ஹாங்காங்கில் தோன்றியதாக நம்பப்படுகிறது.
இந்த மாதிரியான பொரித்த சோறு அமெரிக்க உணவகங்களிலும் பரிமாறப்படுகின்ற ஒன்றாகும்.
இதை வைத்து வட கொரியாவின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அமெரிக்காவும், சீனாவும் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பதை குறிப்பதாகவும் கொள்ளலாம்.
இன்னொரு உள்ளூர் உணவு தேன் கலந்த எலுமிச்சையுடனான பச்சை மங்காய் கெராப் மற்றும் ஆக்டோபஸ்.
எலுமிச்சை பழச்சாறு, சாக்கரை மற்றும் மசாலாவோடு உருவாக்கப்படும் சாஸ் கெராப் என்பதாகும்.
இதன் மூலம், இந்த உணவு பட்டியலில், இந்த சந்திப்பில் மிக முக்கியமானவைகளாக இருக்கின்ற அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள், வட மற்றும் தென் கொரியா, சீனா மற்றும் சிங்கப்பூரின் உணவு வகைகள் அனைத்து உள்ளடக்கப்பட்டுள்ளதை காணலாம்.
இந்த பட்டியலில் ஜப்பான் மற்றும் ரஷ்யா நாடுகளின் உணவுகள் விடுப்பட்டிருப்பதைபோல தோன்றலாம். ஆனால், இது உணவு தட்டில் வெளிப்படும் ராஜீய உறவு என்றே கூறலாம்.