தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்த நடிகர் கேப்டன் ராஜு விமானத்தில் நேற்று அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலியால் துடித்தார்.
அதனால் விமானம் அவசரமாக ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு கேப்டன் ராஜு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Kims Oman மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
500கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் நடிக்க வரும் முன் ராணுவத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.