அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொள்வதை, டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் ரகசியமாக பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூயோர்க்கில் உள்ள கொஹென் வீட்டில் நடத்தப்பட்ட எஃப் பி ஐ சோதனைக்கு பிறகு, இந்த ஆடியோ பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி டிரம்புடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறும் கரென் மெக் டொகலுக்கு பணம் அளிப்பது தொடர்பாக, டிரம்ப் மற்றும் கொஹென் பேசிக் கொள்ளும் ஆடியோ அதில் இருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.