அதில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்பது சட்டவிரோதம் என்றும், அதற்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்முறை குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 வது முறை கைதாகினால், 50 ஆயிரம் அபராதமும் தொடர்ந்து தவறு செய்யும் பட்சத்தில் அதிகபட்சமாக 1 இலட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அத்துடன் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை வருகிற 1 ஆம் திகதி முதல் கடைபிடிக்கப்படும் என்றும், தொடர்ந்து திரையரங்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.