கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகத் தேர்வானவர் ஆரவ். இவர் ´ஓ காதல் கண்மணி´, ´சைத்தான்´ ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ´மீண்டும் வா அருகில் வா´ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், முதன்முதலாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆரவ். இவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை ´தாதா 87´ என்ற படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.
´தாதா 87´ படத்தில், சாருஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் படத்தில் ஜனகராஜ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.