தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன்.
திருமணத்திற்கு பிறகு தற்போது திரையுலகில் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார். ´ஜோக்கர்´ பட ஹீரோ குரு சோமசுந்தரம், லட்சுமி ப்ரியா இணைந்து நடித்துள்ள ´ஓடு ராஜா ஓடு´ என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர்களான நிஷாந்த் மற்றும் ஜத்தின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்ரனின் கணவர் தீபக் பக்காவும் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், ஆனந்த் சாமி, ஆஷிகா சல்வான், ரவீந்திர விஜய், அபிஷேக், நவீன் பவுல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. படத்தின் இயக்குனர்களான நிஷாந்த் எடிட்டிங் பணிகளையும் ஜத்தின் ஒளிப்பதிவு பணிகளையும் சேர்த்து செய்துள்ளனர். டோஸ் நந்தா என்பவர் இசையமைத்துள்ளார்.
குரு சோமசுந்தரம் செட்டாப் பாக்ஸ் வாங்க செல்லும் போது என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்ற ஒரு நாள் கதையை விறுவிறுப்பும் சுவாரஷ்யமும் குறையாமல் படமாக்கியுள்ளனர். மேலும் இந்த படம் லட்சுமி ப்ரியாவிற்கு முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.