நட்புக்கு ஒரு தினம் தேவையில்லை – உண்மை
நண்பன் இருப்பவன் தோற்றதில்லை
அத்தனை தினங்களும் எமக்காகத்தான் – நாம்
அனுதினம் வாழுவோம் அன்பாகத்தான்
நண்பர்கள் எனக்கின்று இல்லையென்றால் – தோழா
நான் இன்றும் சாணமாய் கிடந்திருப்பேன்
சந்தனமாய் என்னை மணக்கவைத்தீர் – என்றும்
சாகும்வரை அதை நினைத்திருப்பேன்.
கவிஞர் அஸ்மின்