சினிமாவில் சூப்பர் ஸ்டார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அப்படி பல கலைஞர்களை வைத்தும் சொல்லலாம்.
அந்த வகையில் வெறுப்பவர்கள் யாரும் இல்லாமல் ரசிகர்கள் எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவரின் ஒவ்வொரு காமெடிகளும் தான் இப்போது உள்ள மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு உதவுகிறது.
இன்று காலை வடிவேலுவின் மகள் கலைவாணிக்கு, ராமலிங்கம் என்பவருடன் மதுரையில் திருமணம் நடந்துள்ளது. அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.