குறிப்பிட்ட சில நடிகர்கள் தவிர சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிப்பவர்கள் அனைவரும் எளிதில் புகழின் உச்சிக்கு சென்றுவிடுவதில்லை. அப்படி சீரியலில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி தான்வார்.
45 வயதாகும் இவர் தற்போதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. அது மட்டுமின்றி அவர் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார் என பல வருடங்களுக்கு முன்பே தகவல் பரவியது, ஆனால் நடிகை அதை மறுத்தார்.
இந்நிலையில் தற்போது சாக்ஷி ஒரு 9 மாத குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு Dityaa என பெயரிட்டுள்ளார் அவர். இந்த பெயருக்கு லக்ஷ்மி என்று அர்த்தமாம்.