தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று, ஜோடி நம்பர் ஒன். கிட்டத்தட்ட பிக்பாஸ் அளவிற்கு ட்ரெண்டான இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்பர்.
போன வருடமும் கலைக்கட்டிய இந்த நிகழ்ச்சி தற்போது மீண்டும் துவங்க உள்ளது. ராமர், ரக்ஷன், ஜாக்குலின், KPY டைட்டில் வின்னர் குரேஷி, நந்தினி என பிரபலமான போட்டியாளர்களின் கலக்கல் நடனத்துடன் கூடிய இதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை கடந்த காலங்களில் நடிகர் சிவகார்த்திகேயன், மாகாபா போன்றோர் தொகுத்து வழங்கியுள்ளனர். தற்போது அந்த வாய்ப்பு வளர்ந்து வரும் நடிகரான ரியோவுக்கு கிடைத்துள்ளது.
இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.