பாய்ஸ், காதலில் விழுந்தேன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் நகுல். வளர்ந்து வரும் நடிகரான இவர் கைவசம் அதிக படங்கள் இல்லை.
இந்நிலையில் அவர் பிலிப்கார்ட் இணையத்தளத்தில் 1.25 லட்சம் ரூபாய்க்கு தன் மனைவிக்கு பரிசளிக்க ஒரு ஐபோனை வாங்கியுள்ளார்.
ஆனால் அது டெலிவரி செய்யப்பட்ட பிறகு தான் நகுலுக்கு தெரிந்துள்ளது, அது போலி என்று. உடனே அவர் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இது பற்றி நகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.