ஷ்யாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது தோம் 2. இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரே ஷபாரின் என்ற நடிகர் தனது தோழி ரோசாலியாவுடன் பங்கேற்றார்.
அப்போது நிகழ்ச்சியிலேயே இருவருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமான ஷபாரின் யாரும் எதிர்ப்பார்க்காத சமயத்தில் ரோசாலியாவை சரமாரியாக அடித்தார்.
பின் அவரின் முடியை எல்லாம் பிடித்து இழுத்து மோசமாக தாக்கினார். இவர்களின் மோசமான இந்த சண்டையை பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிரித்தனர். இந்த சம்பவத்தால் தொலைக்காட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.