இந்தி திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் ஷாகித் கபூர். இவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. இதனால் அவரின் ரசிகர்கள் கவலைக்குள்ளாகினர்.
இந்த நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஷாகித் கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் “தான் முழு உடல்நலத்துடன் இருப்பதாகவும், இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்” என்றும் கூறியுள்ளார்.
நடிகர் ஷாகித் கபூர் தற்போது தெலுங்கில் வெற்றிபெற்ற `அர்ஜூன் ரெட்டி´ படத்தின் இந்தி ரீமேக்கான “காபிர் சிங்” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.