பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் கடந்த 22 ஆம் திகதி ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்.
இவர் தமிழில் அம்மன், அருந்ததி, கேப்டன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களை இயக்கியுள்ளார். கோடி ராமகிருஷ்ணன் இழப்பால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.