தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் டாப்சி. வந்தான் வென்றான், ஆரம்பம், வைராஜா வை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது சிம்புவுடன் ‘கான்’ படத்தில் நடித்து வருகிறார். இரண்டு இந்திப் படங்களும் அவர் கைவசம் வைத்துள்ளார்.
டாப்சி பேட்மிண்டன் வீரரை காதலிப்பதாக கிசுகிசுக்களும் பரவி வருகின்றன இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்றும் இணைய தளங்களில் செய்திகள் பரவி உள்ளன. டாப்சி டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பைக் ஓட்டும் ஆசையை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
‘‘பைக், ஆண்கள் மட்டுமே ஓட்டக்கூடியது அல்ல. பெண்களுக்கும் பைக் ஓட்டும் திறமை இருக்கிறது. ஆண்களைப் போல் பெண்களும் திறமையாக பைக் ஓட்டுவார்கள். எனக்கு பைக் ஓட்ட ஆர்வம் இருக்கிறது. சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பைக் ஓட்ட தயாராக இருக்கிறேன். என் பெற்றோர்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் சம்மதம் கிடைத்தால், தாராளமாக பைக் ஓட்டுவேன்.’’ இவ்வாறு டாப்சி கூறினார்.