அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் வெளியான ஒரே வாரத்தில் 2 பில்லியன் டொலர் வசூலை எட்டியது.
கண்டிப்பாக இப்படம் அவதார் வசூலை முறியடித்து 3 பில்லியன் டொலர் வசூலை எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தின் வசூல் அதற்கு அடுத்த அடுத்த வாரங்களில் வெகுவாக குறைய தொடங்கியது.
இதனால் இதுவரை அவதார் பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடிக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை இம்மாதம் (ஜூன்) 28ஆம் திகதி மீண்டும் உலகம் முழுவதும் படத்தில் மேலும் சில புதிய காட்சிகளை இணைத்து ரீரிலீஸ் செய்யவுள்ளனராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.