60 கள் மற்றும் 70 களில் தமிழில் சோப்பு சீப்பு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் விஜய நிர்மலா. தமிழ்நாட்டில் பிறந்தாலும் அவர் முக்கியமாக தெலுங்கு சினிமாவில் நடிகை மற்றும் இயக்குனராக கலக்கியவர்.
ஒரு பெண் இயக்குனராக அதிக படங்கள் இயக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர் இவர். சின்னத்திரையிலும் ஜொலித்தவர்.
வயது மூப்பு காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் Gachibowliல் உள்ள Continental Hospitalல் காலமானார்.
அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.