சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழை தாண்டி தற்போது தெலுங்கில் தான் கலக்கி வருகின்றார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ பேபி படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘காதலில் ஆண், பெண்ணை அடிப்பது, பெண், ஆணை அடிப்பது எல்லாம் ஒரு வகையான காதல் தான்’ என கூறினார்.
இதற்கு சமந்தா கடும் கண்டனம் தெரிவிக்க, விடுவார்களா ரசிகர்கள், அர்ஜுன் ரெட்டி படம் வந்த போது நீங்கள் அதை கொண்டாடினீர்களே? என்று ஸ்கிரீன் ஷாட் எல்லாம் எடுத்து போட்டு கலாய்த்து வருகின்றனர்.