நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, கடந்த 2000 ல் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதையடுத்து ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா, பிறகு ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை கடந்த 2007 ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இருக்கும் ஜெனிதா என்ற மகளை தான் வனிதா கடத்தி சென்றுவிட்டதாக ஆனந்தராஜ் சமீபத்தில் புகார் கொடுத்திருந்தார்.
ஆனால் தற்போது வனிதா – பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவருடனான காதல் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராபர்ட் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், அவருடன் ஒரு படத்தை இணைந்து தயாரித்துள்ளேன். அவர் தயாரிப்பாளர். நான் இயக்குநர். ஆதாரம் இல்லாமல் என்னை அவரது 3வது கணவர் என்று சொல்வது மன வருத்தத்தை அளிக்கிறது என கூறியுள்ளார்.
மேலும், அம்மா மேல் சத்தியமாக நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.