கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி இந்தப் படம் இந்தியில் ´கபீர் சிங்´ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வந்துள்ளது. இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது.
கடந்த மாதம் 21 ஆம் தேதி வெளியான இந்தப் படம் 3 வது நாளில் 50 கோடி, 5வது நாளில் 100 கோடி, 9வது நாளில் 150 கோடி, 13வது நாளில் 200 கோடி, 23 வது நாளில் 250 கோடி என வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்திய அளவில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் கபீர் சிங் படம் 10வது இடத்திற்குள் நுழைந்துள்ளதால், படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.