அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்தது.
முன்னதாக அவதார் படம் முதலில் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட போது 2.749 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்திருந்தது.
பின்னர் மீண்டும் 2010-ம் ஆண்டு மறு வெளியீடு செய்த போது 33 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்தது. மொத்தமாக 2.789.7 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தில் இருந்து வந்தது.
இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் கடந்த வெள்ளி வரை 2.789.2 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்திருந்தது.
சுமார் 5,00,000 அமெரிக்க டாலர் வசூலில் பின் தங்கியிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அவதார் வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.