தமன்னா நடிப்பில் உருவாகி உள்ள பெட்ரோமாக்ஸ் படம் வரும் 11 ஆம் திகதி வெளியாக உள்ளது. விஷால் ஜோடியாக ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் 2 படங்களில் நடிக்க அவர் கதை கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் எனவும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தான் மாப்பிள்ளை என்றும் செய்தி பரவியது.
இது குறித்து கேட்டபோது, ‘நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. ஆனால் சிலர் தேவையில்லாத வதந்திகளை கிளப்புகிறார்கள். திருமணம் செய்துகொள்ளும் மனநிலைக்கு நான் வரவில்லை. என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்திதான்’ என்றார் தமன்னா.