பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் அதிக அளவில் பாப்புலர் ஆகலாம், சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்று தான் பலரும் பிக்பாஸ் செல்கின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் 3ல் பங்கேற்ற பிரபலங்கள் சிலருக்கும் படவாய்ப்புகள் அதிகம் வருகிறது. கவின் மற்றும் லாஸ்லியா ஆகியோருக்கு சீரியல் வாய்ப்பு வந்திருக்கிறது என செய்திகள் வந்தது.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது விஷாலின் ஆக்க்ஷன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளாராம். அந்த படத்திற்காக அவர் டப்பிங் பேசும் புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.