தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபுவின் மகன் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
பிரணதி ரெட்டி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2015 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மிகவும் சந்தோசமாக நடைபெற்ற இவர்களது திருமணம் தற்போது பிரிவில் முடிய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சு மனோஜ் சமீப காலமாகவே மனைவி பிரணதியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மனைவி பிரணதியை விவாகரத்து செய்யப்போவதாக மஞ்சு மனோஜ் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தன்னுடைய திருமண பந்தத்தில் ஏற்பட்ட முடிவை பற்றியும் அதனால் அவருக்கு ஏற்பட்ட மனக் கஷ்டத்தை பற்றியும் உருக்கமாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னை இதுநாள் வரை ஆதரித்து வந்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இது தான் விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.