நடிகர் விஜய் மற்றும் அஜித் அகியோர் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள். அவர்கள் பெரிய அளவில் வியாபாரமும் ஆகின்றன. நேர்கொண்ட பார்வை, பிகில் என தற்போது பெண்களுக்கு முக்கியத்தும் தரும் படங்களிலும் அவர்கள் நடிக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் நடிகர் சூர்யா போல பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க முன்வருவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார் பிரபல இயக்குனர் மதுமிதா. வல்லமை தாராயோ என்கிற படத்தின் இயக்குனர் தான் இவர்.
பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்ல போனாலே அவர்களது மேனேஜர்களே தடுத்துவிடுகிறார்கள். ´சார் லேடி இயக்குனர்களுடன் வேலை செய்யமாட்டார்´ என கூறி அனுப்பிவிடுகிறார்கள் என மதுமிதா மேலும் கூறியுள்ளார்.
தற்போது சூர்யா சுதா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.