பிகில் படம் 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்பே பேட்டி அளித்திருந்தார்.
தற்போது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிகில் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வந்துள்ளது.
இந்நிலையில் ஒரு பிரபல தனியார் தொலைகாட்சிக்கு அர்ச்சனா தற்போது பேட்டி அளித்துள்ளார். “படம் எங்களுக்கு லாபம் தான். நல்ல profit தான் பண்ணியிருக்கோம்” என கூறியுள்ளார் அவர்.