இளைய தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு வார பத்திரிக்கையில் கூறினர். இதனால், சில சர்ச்சைகள் அடங்கி, அவரே எனக்கு அந்த பட்டத்தில் நாட்டமில்லை என்று கூறி விட்டார்.
ஆனால், அட்லீ படத்தில் விஜய் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக நடிப்பது போல் காட்சிகள் இருக்குமாம். அடிக்கடி சில எம்.ஜி.ஆர் பாடல்களையும் விஜய் பாடுவாராம்.
ஏற்கனவே வில்லு படத்திலும் எம்.ஜி.ஆர் பட சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றது. இந்நிலையில் தளபதியின் அடுத்த குறி சூப்பர் ஸ்டார் இல்லை, அப்படியென்றால்? நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.