மகிழ்ச்சியாக இருப்பதற்காக விலையுயர்ந்த பரிசுகளுடன் தங்கள் துணையுடன் நேரத்தைச் செலவழிக்க விரும்பும் தம்பதிகளில் நீங்களும் ஒருவராக இருந்தால், கண்டிப்பாக பட்ஜெட் குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. விலை உயர்ந்த பரிசு கொடுத்தால்தான் காதல் என்றில்லை. ஆனால், ஆடம்பரமான உணவகங்களுக்குச் செல்வது, பரிசு அல்லது பயணங்களுக்கு செல்வது என்று ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.
உங்கள் துணையுடன் தரமான நேரத்தைச் செலவழிக்க, உங்கள் பட்ஜெட்டுக்குள் வரும் சில அற்புதமான டேட்டிங் யோசனை பற்றி இங்கே கூறுகிறோம். அன்பு குறையாமல் செலவு குறைவாகவும், நீங்கள் மகிழ்ச்சியாகவும் டேட்டிங் செய்ய அற்புதமான யோசனைகளைப் பற்றி இந்த கட்டுரையில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய நாளை ரொமாண்டிக் நாளாக மாற்றுவதற்கு சிறந்த வழிகளில் ஒன்று திரைப்படம் பார்ப்பது. நீங்கள் திரையரங்கிற்குத்தான் சென்று திரைப்படம் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் வீட்டில் அல்லது அறையில் ரொமாண்டிக் திரைப்படம் பார்க்கலாம் என்று திட்டம் போட்டு வையுங்கள். உங்கள் துணையின் விருப்பமான திரைப்படத்தை நீங்கள் தேர்வுசெய்து திரையிட்டு இருவரும் பார்க்கலாம்.
படுக்கையறையில் அமர்ந்து கொண்டு அல்லது இருவரும் ஒன்றாகப் படுத்துக்கொண்டு திரைப்படம் பார்க்கலாம். ஸ்நாக்ஸ் மற்றும் குளிர் பானங்களுடன் அதை இணைக்கலாம். கைகளை பிடித்துக்கொண்டும், கட்டியணைத்துக்கொண்டும் பார்க்கலாம். அது நிச்சயமாக ஒரு மறக்கமுடியாத ஒரு நாளாக உங்களுக்கு இருக்கும். இது செலவு குறைந்ததாக மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் தரமான நேரத்தைச் செலவழிக்க இருவருக்கும் உதவும்.
அதிகம் செலவு ஆக கூடிய பயணங்களை தவிர்த்து விட்டு, ட்ரெக்கிங் செல்லுங்கள். நீங்கள் இவ்வுலக வாழ்க்கையை மறந்து புதிய ஒன்றை தேட விரும்பினால், குறுகிய மலையேற்றங்கள் சிறப்பாக இருக்கும். பரபரப்பான இந்த நகர வாழ்க்கையிலிருந்து தப்பித்து, உங்கள் துணையுடன் ஒரு நாள் செலவிட அமைதியான இடத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். மலையேற்றம் மிகவும் செலவு குறைந்தது. இது உங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத் தரும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும்.
உங்கள் பட்ஜெட்குள் அடங்கும் மற்றொரு டேட்டிங் யோசனை என்றால், உங்கள் துணையுடன் பிக்னிக் செல்லுங்கள். நீங்கள் ஒரு பூங்காவில் அல்லது ஒரு கடற்கரைக்கு அருகில் ஒரு சுற்றுலாவிற்கு திட்டமிடலாம். சில ஸ்நாக்ஸ், பழங்கள், பானங்கள், படிக்க நல்ல புத்தகங்கள், ஒரு பாய் மற்றும் உங்கள் துணையுடன் தருணத்தை அனுபவிக்க நிறைய நேரம் ஏற்பாடு செய்யுங்கள். இந்த வழியில் நீங்கள் உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் போதுமான நேரம் கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக செலவு செய்வதையும் தவிர்ப்பீர்கள்.
நீங்களும் உங்கள் கூட்டாளியும் சில நல்ல உணவைப் பெறவும், அன்பை பரிமாறிக்கொள்ளவும், இனிமையான தருணத்தை அமைக்கவும் ஏங்குகிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக உங்கள் இடத்தில் ஒரு நல்ல இரவு உணவைத் திட்டமிடலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எளிதான மற்றும் சுவையான செய்முறையைக் கண்டுபிடிப்பது மட்டுமே. உங்கள் கூட்டாளருடன் சில சுவையான உணவுகளைச் சமைப்பது குறித்தும் நீங்கள் சிந்திக்கலாம். இந்த வழியில் நீங்கள் இருவரும் ஒரு குழுவாக இணைந்து ஒன்றாக பணியாற்றுவீர்கள். அன்புடன் உணவையும் சேர்ந்து பரிமாறிக்கொளுங்கள்.
இரவு நேரத்தில் நட்சத்திர ஹோட்டலுக்கும் அல்லது பப்புக்கும் செல்வதற்கு பதிலாக, உங்கள் துணையுடன் நீண்ட பயணத்தை நீங்கள் மேற்கொள்ளலாம். இதை உங்கள் துணை நிச்சயமாக விரும்புவார். உங்கள் துணையுடன் நீங்கள் நீண்ட பயணத்தில் இருக்கும்போது உங்கள் எதிர்கால அல்லது தொழில் குறிக்கோள்களைப் பற்றியும் பேசலாம். உங்களிடம் சொந்த வாகனம் இல்லையென்றால், உங்கள் நண்பர்களிடம் கேட்கலாம் அல்லது கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து உங்கள் துணையுடன் ஒரு அழகான நாளை நீங்கள் உருவாக்கலாம்.
உங்கள் வாழ்க்கையில் ஒரு நாளை சிறப்பாக மாற்ற ஒரு அற்புதமான யோசனை படைப்பாற்றலை வெளியே கொண்டுவருவது. நீங்களும் உங்கள் கூட்டாளரும் சில படைப்பாற்றலை அவ்வவ்வபோது, வெளிப்படுத்துங்கள். இதற்காக, நீங்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகளை உருவாக்கலாம் அல்லது அவர்கள் மீதுள்ள அன்பை வெளிபடுத்தும் விதமாக அவர் அல்லது அவளை வரைவது அல்லது அவர்களுக்குப் பிடித்த ஒன்றை வரைந்து தரலாம்.
சதுரங்கம், லுடோ அல்லது கேரம் போர்டு போன்ற சில உட்புற விளையாட்டுகளை உங்கள் துணையுடன் விளையாடலாம். இந்த விளையாட்டுகள் முதலில் குழந்தைத்தனமாகத் தோன்றலாம், ஆனால் ஒருவருக்கொருவர் சில இனிமையான விளையாட்டு தருணங்களை கொண்டிருக்க உங்களுக்கு இது உதவலாம். போட்டியில் தோற்றவர் வெற்றிபெற்றவர் சொல்வதைச் செய்ய வேண்டும் என்று ஜாலியாக விளையாடலாம். இது மன அழுத்தத்தைக் குறைத்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும்.
நீங்களும் உங்கள் துணையும் சில இடங்களுக்குச் செல்ல விரும்பினால், ஒரு மிருகக்காட்சிசாலையை அல்லது அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். இரண்டுமே வேடிக்கையான இடங்கள் மட்டுமல்ல, அந்த விஷயத்திற்கான விலங்குகள் அல்லது கலைப்பொருட்களை பார்ப்பதிலிருந்து நீங்கள் நிறையக் கற்றுக்கொள்ளலாம்.
அழகான நினைவுகளை நினைவுபடுத்துவது மிக அற்புதமான விஷயம். நீங்கள் எப்போதும் பழைய புகைப்படங்கள், வீடியோக்களை திரும்பிப் பார்க்கலாம் மற்றும் உங்கள் கூட்டாளருடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட அழகான தருணங்களை நினைவு கூரலாம். உங்கள் குழந்தைப் பருவ புகைப்படங்கள், உங்களுக்கு பிடித்த பயணங்களின் புகைப்படங்கள் போன்றவற்றையும் நீங்கள் பார்க்கலாம். அற்புதமான தருணங்களை நேசிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை.
நீங்கள் என்ன செய்தாலும், எங்கு சென்றாலும், நீங்களும் உங்கள் துணையும் ஒருவருக்கொருவர் உள் குணங்களைப் புரிந்துகொள்வது மிகமிக அவசியம். எந்தவொரு விலையுயர்ந்த பரிசுகளும் உங்கள் உறவைப் பலப்படுத்த முடியாது. உங்கள் நம்பிக்கையும் அன்பும் தான் இந்த மந்திரத்தை நிகழ்த்தும். உண்மையான பரிசு என்பது ஒருவருக்கொருவர் அன்புடன் நேரங்களைப் பகிர்ந்து கொள்வதுதான். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்க்கையை அழகாக்குங்கள்.