உடலுறவு ஒருவருக்கு இன்பத்தை மட்டும் கொடுப்பதில்லை. அதையும் தாண்டி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. அதுமட்டுமின்றி, உடலுறவு தம்பதிகளின் பிணைப்பை அதிகரிக்கிறது. பொதுவாக உடலுறவு கொள்வதால் மன அழுத்தம் குறையும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் உடலுறவினால் ஆண், பெண் என இருபாலருக்கும் பல நன்மைகள் கிடைக்கிறது.
குறிப்பாக உடலுறவு கொள்வதால் ஆண்களுக்கு குறிப்பிட்ட சில முக்கிய நன்மைகள் கிடைக்கும். இக்கட்டுரையில் உடலுறவு கொள்வதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடலுறவின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். பென்சில்வேனியாவில் உள்ள வில்கிஸ் பல்கலைகழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், ஒரு கல்லூரி மாணவன் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை உடலுறவு கொண்டதில், அந்த மாணவனின் உடலில் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் குறிப்பிட்ட ஆன்டிபாடியின் அளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், உடலுறவில் அடிக்கடி ஈடுபடுங்கள்.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜியில் ஒரு ஆய்வு, மாதத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கும் குறைவான பாலியல் செயல்பாடுகளைக் கொண்ட ஆண்கள், வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு கொண்ட ஆண்களை விட 50 சதவிகிதம் இதய நோய் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது.
உடலுறவு கொள்வதால் கலோரிகள் எரிக்கப்படும். அதுவும் உடலுறவு கொள்ளும் கால அளவு மற்றும் வீரியத்தைப் பொறுத்து அதிக கலோரிகள் எரிக்கப்படும். எனவே உங்கள் கலோரிகளை எரிக்க நினைத்தால், உடலுறவில் அடிக்கடி ஈடுபடுங்கள்.
உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் பெண்களை விட ஆண்கள் தான் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறுவார்களாம். ஆகவே நீங்கள் தூக்கமின்றி பல நாட்களாக அவஸ்தைப்பட்டால், உங்கள் துணையுடன் குதூகலமாக இருக்க முயற்சி செய்யுங்கள். நல்ல தூக்கத்தைப் பெற உடலுறவிற்கு இணையாக எதுவும் வர முடியாது.
ஸ்காட்லாந்தின் மேற்கு பல்கலைகழகத்தில் உள்ள ஆய்வாளர்கள், உடலுறவு உடற்பயிற்சி போன்றது என்றும், இது மன பதற்றத்தில் இருந்து விடுவிக்கும், மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கும் எனவும் கூறுகின்றனர். அதோடு மன அழுத்தத்தில் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டால் நிச்சயம் விடுபடலாம் என்றும் கூறுகின்றனர். எனவே நீங்கள் தினமும் உடலுறவில் ஈடுபட்டால், எப்போதும் மன அழுத்தமில்லாமல் இருப்பீர்கள்.
உடலுறவிற்கும், இரத்த அழுத்தம் குறைவதற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு ஆய்வில் உடலுறவு (சுயஇன்பம் அல்ல) சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் தான் இரத்த அழுத்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். எனவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க அடிக்கடி துணையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள்.
ராயல் எடின்பர்க் மருத்துவமனையின் எம்.டி. பிரிட்டிஷ் நரம்பியல் உளவியலாளர் டேவிட் வீக்ஸ், வாரத்திற்கு 4 முறை உடலுறவு கொண்டதாகக் கூறுபவர்கள், 10 வயது இளையவர்களாக காட்சியளிப்பதைக் கண்டறிந்தார். அன்பான உடலுறவில் இருந்து பெறப்படும் இன்பத்தால் வெளியிடப்படும் ஹார்மோன்கள் இளைஞர்களைப் பாதுகாக்கும் முக்கியமான மனித வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகிறதாம். எனவே உங்கள் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உடலுறவு கொள்ளுங்கள்.
அமெரிக்க மருத்துவ சங்கத்தின் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அடிக்கடி விந்து வெளியேற்றும் ஆண்களுக்கு (மாதத்திற்கு குறைந்தது 21 முறை) புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இந்த ஆய்வில் இதற்கு உடலுறவு தான் காரணம் என்பது முழுமையாக தெரியவில்லை. புற்றுநோயின் அபாயத்தை பல காரணிகள் பாதிக்கின்றன. ஆனால் அதிகமான செக்ஸ் ஒன்றும் செய்யாது.
1997 இல் பிரிட்டிஷ் மெடிக்கல் பத்திரிக்கையில் வெளிவந்த ஐரிஸ் ஆய்வில், ஒரு தசாப்த காலப்பகுதியில் 1,000 நடுத்தர வயது ஆண்களின் இறப்பைக் கண்டறிந்தது மற்றும் இதற்கு பாலியல் செயல்பாடு ஆரோக்கியத்தில் ஒரு பாதுகாப்பு விளைவை ஏற்படுத்தக்கூடும் என்ற முடிவை வெளியிட்டது.
5,000 பேரைக் கொண்ட ஆஸ்திரேலிய ஆய்வில், திருமணமான ஆண்கள் திருமணமாகாத ஆண்களை விட 135 சதவீதம் மகிழ்ச்சியுடன் இருப்பதாக காட்டியது, அதே நேரத்தில் திருமணமான பெண்களில் 52 சதவீதம் பேர் திருமணமாகாத பெண்களை விட மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.